5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை நான்காவது நாள் முடிவில் 1,49,855 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில், நான்காவது நாளான நேற்று (29/07/2022) 23 சுற்றின் முடிவில் 1,49,855 கோடியை ஏலத்தொகை தாண்டியதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நான்காவது நாள் ஏலத்திலும் முடிவுகள் எட்டப்படாததால், ஐந்தாவது நாள் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அதிகபட்ச முன்பணமாக ரிலையன்ஸ் ஜியோ 14,000 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. அதற்கு அடுத்து ஏர்டெல் நிறுவனம், 5,500 கோடி ரூபாயை முன்பணமாக செலுத்தியுள்ளது. இதன் அடிப்படையிலும் தகுதி புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.