5G in India on Diwali - Mukesh Ambani

Advertisment

இந்தியாவில் இன்னும் 18 மாதங்களுக்குள் 100 மில்லியன் வீடுகளை இணையப் பயன்பாட்டிற்குள் இணைக்க திட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி முதல் 5ஜிதொழில்நுட்பம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி என நான்கு நகரங்களில் கொண்டுவரப்படும் எனவும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அனைத்து நகரங்களுக்கு 5ஜிதொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அடுத்த 18 மாதங்களுக்குள் 100 மில்லியன் வீடுகளை இணைய பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2 லட்சம் கோடி செலவில் இந்தியா முழுவதும் 5ஜிபயன்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் முதல் கட்டமாக 75000 கோடி முதலீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6ஜிதொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.