5G in 8 cities including Chennai

Advertisment

அதிவேக இணைய வசதியை வழங்கவுள்ள 5ஜி தொழில்நுட்பம், இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி அக்.1 ஆம் தேதிடெல்லி பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட எட்டு மாநகரங்களில் 5ஜி தொழிற்ப சேவையை ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் தீபாவளியையொட்டி 5ஜி சேவையை பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் ஆகிய நகரங்களில் அந்த சேவையை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. 5ஜி வசதி உள்ள செல்போன்களில் 5ஜி சேவைக்கான குறுஞ்செய்தி மூலம் தகவல் வாடிக்கையாளர்களுக்கு தகவல் வரும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.