கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 லிருந்து5,865 ஆக உயர்ந்துள்ளது.இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149-லிருந்து169 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 473லிருந்து 478 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 540 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் 17 பேர் இறந்துள்ளனர்.