Advertisment

நாட்டில் எத்தனை பேருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு? - நிதி ஆயோக் தகவல்!

dr vk paul

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தினசரி கரோனாபாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தநிலையில்நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால், தடுப்பூசி குறித்தசில கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் ஜான்சன்&ஜான்சன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisment

இதுதொடர்பாகடாக்டர் வி.கே பால் கூறுகையில், "ஜான்சன்&ஜான்சனின்ஒற்றை டோஸ் தடுப்பூசி தொடர்பாக அந்தநிறுவனத்துடன்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திட்டத்தின்படி ஹைதராபாத்தில் உள்ள பயோ-இ நிறுவனத்திலும் அந்த தடுப்பூசியை தயாரிக்க இருக்கிறோம்" என தெரிவித்தார்.

Advertisment

நாட்டில் இதுவரை 12 மாநிலங்களை சேர்ந்த 56 பேரிடம் டெல்டா ப்ளஸ்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் வி.கே பால்தெரிவித்தார். மேலும் அவரிடம் உலகின் முதல் டி.என்.ஏ கரோனாதடுப்பூசியானசைடஸ் காடிலா நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சைடஸ் காடிலாவின் விண்ணப்பம் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் உள்ளது. அது நிபுணர் குழுவின் மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டுள்ளது. நேர்மறையான பதில் கிடைக்கும் என நம்புகிறோம். (டி.என்.ஏ தடுப்பூசி) ஒரு தனித்துவமான தொழில்நுட்பம் என்பதால் அது (ஒப்புதல் பெறுவது) பெருமைக்குரிய தருணமாக இருக்கும். அது நமது தடுப்பூசி திட்டத்திற்கு உந்துதலைஅளிக்கும்" என தெரிவித்தார்.

DCGI Johnson & Johnson NITI AAYOG zydus cadila
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe