Advertisment

புதுச்சேரி அரசின் பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம் நாளான இன்று வயிற்றில் ஈரத்துணி போட்டு நூதன போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 55 மாத சம்பளத்தை வழங்க வேண்டும், தீபாவளி பஜார் நடத்தியதில் மானியம் 65 லட்சத்தை வழங்க வேண்டும், பாப்ஸ்கோ ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டிய 6 ஆண்டு வாடகை ரூ.1 கோடியே 30 லட்சம் மற்றும் அரிசி விநியோகம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் விலையை வழங்க வேண்டும், பொங்கல் பொருட்கள் வழங்கியதற்கு கமிஷன் தொகை ரூ.31 லட்சமும், பணி ஓய்வில் சென்ற தொழிலாளர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி ஓய்வு கால பண பலன்களை அளிக்க வேண்டும், பாப்ஸ்கோ நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்து பாப்ஸ்கோ மதுபான கடைகளை தனியாருக்கு குத்தகைக்கு விட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வயிற்றில் ஈரத் துணியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஊழியர்கள் மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினார்கள்.