புல்லெட் ரயிலுக்காக இத்தனை ஆயிரம் மரங்களை வெட்டுவதா..? பொதுமக்கள் வேதனை...

மாநிலங்களவையில் நடைபெற்ற கூட்டத்தில், மகாராஷ்டிரா, குஜராத் இடையிலான புல்லெட் ரயிலுக்காக வழித்தடங்கள் அமைப்பதற்காக 53,467 மரங்கள் வெட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

53000 trees to be cut down for mumbai gujarat bullet train

மும்பையிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் வரை புல்லட் ரயில் விடுவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அனுமதி அளித்தது. இதையடுத்து வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி புல்லட் ரயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான வழித்தடங்கள் 508 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக 137.149 ஹெக்டேர் நிலப்பரப்பில்உள்ள மரங்கள் வெட்டப்பட உள்ளன. இந்த திட்டத்திற்காக சுமார் 53, 467 மரங்கள் வெட்டப்பட உள்ளது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வேதனையை தெரிவித்துள்ளனர்.

bullet train Mumbai
இதையும் படியுங்கள்
Subscribe