modi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

பிரதமர் மோடி கடந்த நான்கு ஆண்டுகளில்மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு 355 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisment

பீமப்பா கடாட் என்பவர் பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு இதுவரை எவ்வளவு ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

இந்த கேள்வி தொடர்பாக பதிலளித்திருந்த பிரதமர் அலுவலகம் இதுவரை மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக 355 கோடி செலவிடப்பட்டுள்ளது எனபதிலளித்துள்ளது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

மேலும் அந்த பதிலில், இந்த நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்குமோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 41 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு 52 நாடுகள் சுற்று பயணத்தை இதுவரை முடித்துள்ளார். மேலும் இந்த நான்கு ஆண்டுகளில் 165 நாட்கள் அவர் வெளிநாடுகளில் சுற்று பயணத்தில் இருந்துள்ளார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் 2015-ஆம் ஏப்ரல் மாதம் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு சென்றவந்தசுற்றுப்பயணசெலவு மட்டும் 31,25,78,00 ரூபாய். இதுவே அவரின் அதிகபட்ச சுற்றுப்பயண செலவு.

அதேபோல் 2014-ஆம் ஜூன் மாதம்மேற்கொண்ட பூட்டானுக்கு சென்றுவந்த செலவு மட்டும் 2,45,27,000 ரூபாய். இதுவே அவரது குறைந்தபட்ச சுற்றுப்பயண செலவுஎனவும்கூறப்பட்டுள்ளது.

மேலும் உள்நாட்டு சுற்றுப்பயணங்கள் தெடர்பான தகவலை பிரதமர் அலுவலகம் தர மறுத்துவிட்டதாகவும்பீமப்பா கடாட் கூறியுள்ளார்.