உலகளவில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,856 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,754 என்ற அளவிலும் இருக்கிறது. கரோனாவைரஸ்தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக அளவில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்துவருகின்றன.அதே போல் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 15,712 பேருக்குகரோனாதொற்றுள்ளது. கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை 506 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில்கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 488 லிருந்து 506 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 2015ல் இருந்து 2230 ஆக அதிகரித்துள்ளது.