ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவரை தேடிவந்த 500 ரூபாய் நோட்டு கட்டுகள்

500 note bundles were found while bathing in the river!

இப்படி ஒரு சம்பவம் நிகழும் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்பெயர்தெரியாத அந்த நபர். ஆம் கேரளாவில் ஆற்றிங்கல் பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் இரண்டு பெரிய தெர்மோகோல் பெட்டிகள் ஆற்றில் மிதந்து வருவதை பார்த்துள்ளார். எதேச்சையாக அதனை பிரித்து பார்த்த அவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. உள்ளே 500 ரூபாய் நோட்டுகள் கட்டு காட்டாக இருந்தது. இதனை கண்ட அந்த நபர் அதனைப் பார்த்து திகைத்து நின்றார். ஆனால் அந்தமகிழ்ச்சிகொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை. அந்த 500 ரூபாய் நோட்டுகளை கூர்ந்து கவனித்த போதுதான் தெரிய வந்தது அவை சினிமா ஷூட்டிங் பயன்பாட்டிற்காக அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் என்று.

அந்த ரூபாய் நோட்டின் ஒரு பகுதியில் 'Only For Shooting Purpose' என எழுதியிருந்ததை கண்டு மீண்டும் அதிர்ந்தார். 500 ரூபாய் நோட்டுகள் நீரில் அடித்துவந்து தன்னிடம் சேர்ந்தது என்பது எப்படி அவர் எதிர்பார்க்காத ஒன்றோ அதேபோல் அவை போலி என்பதும் அவர் எதிர்பார்க்காத ஒன்றாகவே ஏமாற்றத்தில் முடிந்தது. இது குறித்து ஆற்றிங்கல் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அண்மையில் அதே கேரளாவில் ஆட்டோ ஓட்டுநருக்கு 25 கோடி ரூபாய் ஓணம் பம்பர் லாட்டரி அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Kerala money
இதையும் படியுங்கள்
Subscribe