ADVERTISEMENT

பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட 500 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்...

05:55 PM Mar 27, 2019 | kirubahar@nakk…

பாகிஸ்தானிலிருந்து ஈரானிய படகில் கடத்திவரப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ போதைப்பொருள் கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

குஜராத் கடற்பகுதியில் இந்திய படையினர் இணைந்து கூட்டாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஈரான் நாட்டு படகு ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அதில் 100 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, படகின் ஓட்டுநர் இந்திய படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது படகுக்கு தீ வைத்து போதை பொருட்களை அழிக்க முயன்றுள்ளார். ஆனால் இந்திய படையினர் வேகமாக செயல்பட்டு அவர்கள் கொண்டுவந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து, அந்த படகில் வந்த 9 இரானியர்களையும் கைது செய்துள்ளனர். இந்த படகு பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து கிளம்பியுள்ளது. பாகிஸ்தானின் ஹமீது மலேக் என்பவர் இந்த பொருட்களை அவர்களிடம் கொடுத்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT