ADVERTISEMENT

பணியாளர்களுக்கு கரோனா; உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு!

09:50 AM Apr 12, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. தினந்தோறும் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியிலும் கரோனா நான்காவது அலை ஏற்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்தபடியே பணியாற்ற முடிவு செய்துள்ளனர். காணொளி வாயிலாக அவர்கள், வழக்குகளை விசாரிக்கவுள்ளனர். மேலும் உச்ச நீதிமன்ற கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும், தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (12.04.2021) காலை 10.30 மணிக்கு கூட வேண்டிய நீதிபதிகள் அடங்கிய பென்ச், 11.30 மணிக்கும்; 11 மணிக்கு கூட வேண்டிய பென்ச் 12 மணிக்கும் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT