இந்தியாவில் கரோனாபரவல் தீவிரமாகி வருகிறது. தினந்தோறும் கரோனாஉறுதி செய்யப்படுபவர்களின்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியிலும் கரோனாநான்காவது அலை ஏற்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளதாகஅதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்துஉச்ச நீதிமன்றநீதிபதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்தபடியே பணியாற்ற முடிவு செய்துள்ளனர். காணொளி வாயிலாக அவர்கள், வழக்குகளை விசாரிக்கவுள்ளனர். மேலும் உச்ச நீதிமன்ற கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும், தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (12.04.2021) காலை 10.30 மணிக்கு கூட வேண்டிய நீதிபதிகள் அடங்கிய பென்ச், 11.30 மணிக்கும்;11 மணிக்கு கூட வேண்டியபென்ச்12 மணிக்கும் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.