Skip to main content

மூன்று மாத காத்திருப்பு... தாயைக் காணத் தனியாக 2,100 கிலோமீட்டர் பயணித்த ஐந்து வயது மகன்...

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

5 year old son Vihaan Sharma has travelled alone from Delhi to bengaluru

 

ஊரடங்கால், தனது தாயைப் பிரிந்து டெல்லியில் சிக்கியிருந்த ஐந்து வயது சிறுவன், இன்று விமானம் மூலம் பெங்களூரு வரை தனியாகப் பயணித்து தனது தாயைச் சந்தித்துள்ளான். 
 


கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்துச் சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், விஹான் என்ற ஐந்து வயது சிறுவன் டெல்லியிலும், அவனது தாய் பெங்களூருவிலும் சிக்கிக்கொண்டனர். தனது தாயைச் சந்திக்க சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக முயன்று வந்த அந்தச் சிறுவன், இன்று உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியவுடன் விமானம் மூலம் பெங்களூரு வந்துள்ளான். சுமார் 2,100 கிலோமீட்டர் தூரம் விமானத்தில் தனியாகப் பயணித்து, இன்று காலை கெம்பகௌடா விமானநிலையத்தில் தனது தாயைச் சந்தித்துள்ளான் அந்தச் சிறுவன். இதுகுறித்து அச்சிறுவனின் தாய் கூறுகையில், "எனது 5 வயது மகன் விஹான் சர்மா டெல்லியிலிருந்து தனியாகப் பயணம் செய்து இங்கு வந்துள்ளான். ஊரடங்குக்குப் பின் தற்போது 3 மாதங்கள் கழித்து மீண்டும் பெங்களூருக்கு வந்துள்ளான்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலிக்கு சரமாரி கத்திகுத்து; காதலன் வெறிச்செயல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 lover stabbed his girlfriend who forced her to marry him

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் ஆதித்யா சிங்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவரும் இவர்' அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம் பெண் ஒருவரும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆதித்யா சிங்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆதித்யா சிங் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆதித்யா சிங்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஆதித்சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மறுபடியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் ஆதித்யா சிங்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கம் போல மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை ஆதித்யா சிங், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். பின்பு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில்  காதலிப்பதாக கூறி  ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆதித்யா சிங்கை தேடி வருகின்றனர்.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!