ே

Advertisment

காஷ்மீரில் கடந்த 12 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகளை போலீசார் அதிரடியாக சுட்டுக்கொன்றுள்ளனர். காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலை அடுத்து காஷ்மீர் முழுவதும் போலீசார் தீவிர சோதனை செய்து வந்தனர். இதில் சந்தேகத்துக்கு உள்ளான சிலரை விசாரித்ததில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் குறிப்பிட்ட இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் போலீசாரை கண்டதும் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், 5 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.