5 students who were eating in the air india plane crash  lost

Advertisment

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 10வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்த நிலையில், குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 170 உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே விமானம் வானிலேயே செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் அந்த பகுதியில் இருந்த மருத்துவ கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தின் போது விடுதியில் இருந்த மாணவர்கள் சிலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விமான விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விபத்து ஏற்பட்டபோது மதிய நேரம் என்பதால் மருத்துவக் கல்லூரி விடுதியில் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் அப்போது உணவு அருந்தியதாகக் கூறப்படுகிறது. விடுதி கட்டடத்தின் உணவக(மெஸ்) பகுதியின் மேல் விமான விழுந்ததில் தற்போது 5 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.