Skip to main content

102 நாட்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கி... பல லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபர்...

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

ஹைதராபாத்திலுள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஹோட்டலில் சங்கர் நாராயணன் எனும் தொழிலதிபர் ஒருவர் தங்கியுள்ளார். 
 

taj banjara

 

 

இவர் இந்த ஹோட்டலில் சுமார் 102 நாட்கள் தங்கியுள்ளார். இவர் இத்தனை நாள் தங்கியதற்கு ரூ. 25.96 லட்சம் கட்டணமாக வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 13.62 லட்சத்தை கட்டிவிட்டார். மீதமுள்ள தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.
 

ஹோட்டல் நிர்வாகம் இவர் பாதி பணம் கட்டியதால் லேசாக நம்பியுள்ளது. இதனையடுத்து ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் அந்த நபர் ஹோட்டலில் இருந்து ஓடிவிட்டார். சங்கரை காணவில்லை என்றதும், ஹோட்டல் நிர்வாகம் அவரை போன் மூலம் தொடர்புகொண்டுள்ளது.
 

ஆனால், பலனில்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்கையில் போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார், அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவின் குதிரை பேரம்; பறந்த ஜார்க்கண்ட் எம்.எல்ஏக்கள்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
BJP's Horse Bargain; Jharkhand MLAs who flew to Hyderabad

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று 7 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய முதலமைச்சராக பதவியேற்க தீவிரம் காட்டி வரும் சம்பாய் சோரனை ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இந்நிலையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், விமானம் மூலம் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக குதிரை பேரம் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Next Story

"உ.பி. மக்கள் இப்போது பயப்படத் தேவையில்லை.." - யோகி ஆதித்யநாத்

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

uttarprdesh cm yogi aditya nath talks about state law and order issue

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மற்றும் ஹர்டோய் மாவட்டங்களில் பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் புதிதாக பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று (19.04.2023) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

 

அப்போது அவர் பேசுகையில், "உத்தரப்பிரதேசத்தில் தற்போது ரவுடி, மாபியா கும்பல் மற்றும்  குற்றவாளிகள் யாரும் செல்போன் மூலம் தொடர்புகொண்டு தொழிலதிபர்களை மிரட்ட முடியாது. ஒரு காலத்தில் உத்தரப்பிரதேசம் வன்முறைகளுக்கு பெயர்போன இடமாக திகழ்ந்தது. சில மாவட்டங்களின் பெயர்களை கேட்டாலே மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தும். ஆனால் இப்போது பயப்படத் தேவையில்லை. உத்தரப்பிரதேசத்தில் இப்போது சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

 

2012 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் 2017 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஒரு ஊரடங்கு உத்தரவு கூட பிறப்பிக்கப்படவில்லை. அதற்கான சூழ்நிலைகளும் ஏற்படவில்லை. அதனால் உத்தரப்பிரதேசத்தில் தொழில்கள் தொடங்கி முதலீடுகள் செய்வதற்கு சாதகமான வாய்ப்புகள், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கு உத்தரப்பிரதேசம் உத்தரவாதம் அளிக்கிறது" எனப் பேசினார்.