Advertisment

கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியைக் காப்பாற்ற போன 5 பேர் பலி - காரணம் இதுதான்!

k

Advertisment

கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டியைக் காப்பாற்ற முயன்ற 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள கோட்வாலிகா பகுதியில் இன்று காலை கன்றுக்குட்டி ஒன்று கிணற்றுக்கு அருகில் நின்று வைக்கோல் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் கன்றுக்குட்டி எதிர்பாராத விதமாகக் கிணற்றில் விழுந்துள்ளது. கன்றுக் குட்டியின் சத்தம்கேட்டு சாலையில் சென்ற விஷ்ணு என்ற நபர் கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். அங்கு கன்றுக்குட்டி ஒன்று செய்வதறியாமல் கத்திக் கொண்டிருப்பதை பார்த்த அவர், உடனடியாக அதைக் காப்பாற்றும் பொருட்டுக் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் கிணற்றில் விஷவாயு இருந்ததால் அவர் மூச்சு விட சிரமப்பட்டுக் கத்தியுள்ளார். அவரின் சத்தத்தைக் கேட்டு மேலும் நான்கு பேர் கிணற்றில் இறங்கியுள்ளனர். இதில் அனைவரும்விஷவாயு தாக்கி இறந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மாநில அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் வழங்கியுள்ளது.

cows
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe