ADVERTISEMENT

பிராண்ட் இல்லாத பொட்டலமிட்ட உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி! 

10:52 AM Jun 29, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிராண்ட் இல்லாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கும் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று (28/06/2022) தொடங்கியது. முதல் நாளான நேற்று அமைச்சர்கள் குழு பரிந்துரைத்த சிலவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முத்திரை இல்லாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் இறைச்சி, மீன், தயிர், பன்னீர், உலர் பருப்பு வகை, காய்கறிகள் கோதுமை, பட்டாணி மாவு, வெல்லம் போன்ற பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பொட்டலமிடப்படாத முத்திரையற்ற பொருள்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் ரூபாய் 1,000- க்கும் குறைவான அறைகளின் வாடகையில் 12% ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

காசோலைகளை வங்கி விதிக்கும் கட்டணத்தில் 18%- ம், அட்லஸ் வரைபடம், விளக்கப்படங்களுக்கு 12%- ம் ஜிஎஸ்டி விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ, குதிரை பந்தயம் உள்ளிட்டவைகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT