Advertisment

நண்பனுக்காக உயிரைவிட்ட 5 நரிகள்... சோகத்தில் கேரளா!

5 foxes who died for a friend ... Animal lovers in grief!

மின் கம்பியைக் கடித்த 6 நரிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அறுந்து கிடந்த மின்கம்பியைக் கடித்ததில் 6நரிகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. மரம் விழுந்ததால் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் நரி ஒன்று உயிருக்குப் போராடியுள்ளது. போராடிய ஒற்றை நரியைக் காப்பாற்ற 5 நரிகள் முயன்ற நிலையில் தோல்வியில் முடிந்தது. நண்பனைக் காப்பாற்ற மின்கம்பியை வாயால் கடித்து இழுத்த மற்ற ஐந்து நரிகள் உட்பட 6 நரிகளும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

Advertisment

நண்பன் நரியைக் காப்பாற்ற முயன்று மின்கம்பியை வாயில் கடித்தபடி வரிசையாக 6 நரிகள் இறந்து கிடைக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியையும், விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

wild animals Kerala fox
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe