Advertisment

11 நாட்களில் 5 பாலங்கள்; பீகாரில் தொடர் அதிர்ச்சி சம்பவம்!

5 bridges in 11 days in Bihar

பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுபானி மாவட்டத்தின் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

Advertisment

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்தப் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. பீகாரில் தொடர்ச்சியாக பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த ஜூன் 18ஆம் தேதி, அராரியா மாவட்டத்தில் பத்ரா ஆற்றின் குறுக்கே ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. இன்னும் சில தினங்களில் இந்த மேம்பால திறப்பு விழா நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்தப் பாலம் இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 22ஆம் தேதி, 40 ஆண்டுகள் பழமையான கந்தக் ஆற்றின் மீதிருந்தப்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. ஜூன் 23ஆம் தேதி, கிழக்கு சம்பாரானில் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது.

கடைசியாக ஜூன் 27ஆம் தேதி கிஷன்கஞ்சில் உள்ள கன்கை மற்றும் மகாநந்தா இணைக்கும் துணை நதியின் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இந்த நிலையில், மதுபானி ஆற்றில்கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகாரில் கடந்த 11 நாட்களில் தொடர்ச்சியாக 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bridge Bihar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe