Advertisment

காஷ்மீர் இணைய சேவையில் 18 மாதங்களுக்குப் பிறகு மாற்றம்!

kashmir

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்இந்தியஅரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம்தேதி நீக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் தடுப்புக் காவலிலும், வீட்டுசிறையிலும் வைக்கப்பட்டனர்.

Advertisment

இதனையொட்டிய பாதுகாப்பு நடவடிக்கையாக, ஜம்மு - காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. அதன்பின்னர் அங்கு இணையசேவை2ஜி வேகத்தில் மட்டுமே வழங்கப்பட்டது. இதன்பிறகு கடந்த ஆகஸ்டில், ஜம்மு- காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் மட்டும் சோதனை முயற்சியாக இணையசேவை4ஜி வேகத்திற்கு அதிகரிக்கப்பட்டது.

Advertisment

இந்தநிலையில் 18 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீர்முழுவதும் 4ஜி இணைய சேவைமீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. பாதுகாப்பு சூழ்நிலையைக் கவனமாக ஆராய்ந்த பிறகு, 4ஜி சேவை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4g service article 370 revoked jammu and kashmir
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe