48 Tamils incidnet for trying to red wood 

செம்மரங்களைக் கடத்த முயன்றதாக 48 தமிழர்களைஆந்திர அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

ஆந்திர மாநிலம் கர்னூல் சரக டிஐஜிசெந்தில் குமார் தலைமையில் செம்மரக் கடத்தல் சிறப்புப் படை செயல்பட்டு வருகிறது. இந்த அதிரடிப்படை குழுவினர் வழக்கம் போல் ரோந்து சென்றுள்ளனர். அப்போது செம்மரங்களைக் கடத்த முயன்றதாகத்திருப்பதி அடுத்துள்ள சீனிவாச மங்காபுரம் என்ற பகுதிக்கு அருகேயும், கடப்பா மாவட்டம், அண்ணமயா மாவட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப் பகுதியில் செம்மரங்களைக் கடத்த முயன்ற 48 தமிழர்களை ஆந்திர அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மொத்தம் 51 செம்மரங்களைக் கடத்த முயன்றுள்ளனர்.

Advertisment

மேலும் செம்மரங்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட 5 கார்கள், ஒரு ஆட்டோ, 3 இரு சக்கர வாகனங்களை அதிரடிப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்த முயன்ற செம்மரங்களின் மொத்த மதிப்பு 2 கோடி ரூபாய் என அதிரடிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.