இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,072 லிருந்து 3,374 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 75 லிருந்து 79 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 213 லிருந்து 267 ஆக உயர்ந்துள்ளது.

 472 people in the last 24 hours

Advertisment

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490, தமிழகத்தில் 485 பேருக்கு கரோனா உறுதியானது. மேலும் டெல்லி- 445, கேரளா- 306, தெலங்கானா- 269, உத்தரப்பிரதேசம்- 227, ராஜஸ்தானில்- 200 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment

நாடு முழுவதும் 274 மாவட்டங்களில் தற்போது கரோனாபாதிப்பு உள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.79 பேர் உயிரிழந்த நிலையில் 267 பேர் குணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 472 பேருக்கு பாதிப்பு உறுதியாகிஉள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.