Advertisment

இன்று 45-வது ஜி.எஸ்.டி கூட்டம் - விவாதிக்கப்பட இருக்கும் முக்கிய அம்சங்கள்!

nirmala sitharaman

Advertisment

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 45-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் இன்று காலை நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத்தகவல் வெளியானது.

அதேபோல்ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் மீது ஐந்து சதவீதஜி.எஸ்.டிவிதிப்பது தொடர்பாகவும் இந்தஜி.எஸ்.டி கவுன்சில்முடிவெடுக்கப்பட இருப்பதாகத்தகவல்கள் கூறின. இந்தநிலையில் கரோனாசிகிச்சையில் பயன்படுத்தப்பட்டுவரும் 11 மருந்துகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் வரிச்சலுகையைடிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கஜி.எஸ்.டி கவுன்சிலில்முடிவெடுக்கப்படும் எனத்தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும்தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

GST gst council Nirmala Sitharaman
இதையும் படியுங்கள்
Subscribe