Advertisment

சிங்கு எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயியின் உடல்!

farmer

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லையில் முற்றுகையிட்டுள்ள அவர்கள், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில், சிங்கு எல்லைக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து45 வயதான விவசாயி ஒருவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டுஇறந்திருக்கலாம்என கூறப்படுகிறது.

Advertisment

இறந்த விவசாயியின் பெயர்குர்பிரீத் சிங் என்றும், அவர் பஞ்சாபின் ஃபதேகர் சாஹிப் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ள போலீசார், அவர் வேளாண் சட்டங்களைஎதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.மேலும், குர்பிரீத் சிங்கின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளபோலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

farm bill Farmers Punjab
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe