இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 16% அதிகரித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலங்களில் 4 கோடியே 4 லட்சம் ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசின் உற்பத்திக்கு ஏற்ற ஊக்கத்தொகை திட்டமே, உற்பத்தியாளர்கள் அதிகளவு உற்பத்தி செய்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு ஸ்மார்ட்போன்கள் உள்நாட்டில் தயாரித்தவை என அந்நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.