இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு முழு அளவில் செலுத்தப்படுகின்றன. ஸ்புட்னிக் V தடுப்பூசி முழு அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லையென்றாலும் குறிப்பிட்ட சில இடங்களில் செலுத்தப்பட்டுவருகிறது.
இந்தநிலையில், இந்தியாவில் இன்று (03.07.2021) காலை ஏழு மணிவரை 34 கோடியே 46 லட்சத்து 11 ஆயிரத்து 291 தடுப்பூசி டோஸ்கள்செலுத்தப்பட்டுள்ளதாகமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43 லட்சத்து 99 ஆயிரத்து 298 தடுப்பூசி டோஸ்கள்செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.