Advertisment

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் 42 பேருக்கு கரோனா!

bjp

இந்தியாவில் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில்டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் 42 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உத்தரப்பிரதேச தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்ததையொட்டி, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கரோனாபரிசோதனையில் 42 பணியாளர்களுக்கு கரோனா உறுதியானதாகஅந்தவட்டாரங்கள் கூறியுள்ளன.

Advertisment

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பெரும்பாலானோர், தூய்மை பணியாளர்கள் எனவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்கூறியுள்ள தகவலறிந்த வட்டாரங்கள், பாஜக தலைமை அலுவலகமும்முழுமையாக தூய்மைபடுத்தப்பட்டதாககூறியுள்ளன.

Advertisment

ஏற்கனவே பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe