
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 40 ஆவது கூட்டம் அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்றான தமிழகம் சார்பில் நேரடியாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில உறுப்பினர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை திறந்துவிடக் கோரிக்கை வைக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை வரும் மே 27ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது. எனவே ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழங்கப்பட வேண்டிய அளவான 9.19 டிஎம்சி நீரையும் ஜூலை மாதத்திற்கு 30.24 டிஎம்சி நீரையும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா திறக்க வேண்டும் என தமிழக உறுப்பினர்கள் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.