எகிப்தில் பண்டைய காலத்தில் இறந்த முன்னோர்களின் உடல்களை பதப்படுத்தி வருவது அவர்களின் பண்பாடாக இருந்துள்ளது. அவைகளை மம்மி என்று அழைக்கிறோம்.

Advertisment

mummy

இந்தியாவிலுள்ள கொல்கத்தா அருங்காட்சியகத்தில் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு அந்த மம்மியை ஆய்வு செய்ய எகிப்திய பெண் நியுணர் ரானியா அகமது அன்பவர் வந்தார்.

Advertisment

ஆய்வுக்குப் பிறகு அவர் அளித்த அறிக்கையில் ‘மம்மி’ வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டியில் சில பகுதி சிதைந்தும் சேதம் அடைந்தும் உள்ளதாக தெரிவித்த அவர் அதை சரி செய்ய வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இந்திய அருங்காட்சியக இயக்குனர் கூறுகையில், “நிபுணர் ரானியா அகமது ஆய்வு செய்து சென்ற பின்பு ‘மம்மி’யை கூடுதல் கவனத்துடன் பாதுகாத்து வருகிறோம். அது வைக்கப்பட்டுள்ள அறையின் வெப்பநிலை மற்றும் ஈரத்தன்மையை கவனமுடன் பராமரித்து வருகிறோம். இதை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பராமரித்து வருவதால் தூசி படிந்துள்ளது. அதை தவிர்க்க இப்போது காற்று புகாத அறையில் வைத்துள்ளோம். மேலும் நிபுணர் கூறியவாறு பெட்டியின் ஈரத்தன்மையை சீராக வைக்க அதை கண்ணாடி பெட்டியில் வைத்தும் மற்றும் அது நிறம் மங்காமல் இருக்க குறைவான வெளிச்சத்திலும் வைத்துள்ளோம்” என்று கூறினார்.

Advertisment