40 Rescue of a child who fell into a borehole

Advertisment

40 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த மூன்று வயது குழந்தை போராடி மீட்கப்பட்ட சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலம் நாளந்தாவில் மூன்று வயது குழந்தை வீட்டின் முன்புறம் விளையாடி கொண்டிருந்த நிலையில் சுமார் 40 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து. உடனடியாக மீட்பு துறையினருக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தேசிய மீட்புப் படையினர் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி குழந்தையை உயிருடன் மீட்டனர். தற்பொழுது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.