ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 4 வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்திருக்கும் சம்பவம், அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை விழுந்த சம்பவம் மதியம் தெரியவந்த நிலையில், உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்புத்துறை வீரர்களும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.‌

Advertisment

vn

இதுகுறித்து பேசிய அம்மாநிலத்திற்குட்பட்ட சுரோஹி மாவட்ட கலெக்டர் சுரேந்திர குமார், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தைக்கு உடனடியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து குழந்தை மீட்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.