அண்மையில் டெல்லி புகாரியில் 11 பேர் ஒரே வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்த நிலையில் கேரளாவில் தொடுபுழாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டு வீட்டின் வாசல்பகுதியில்புதைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையையும்,பரபரப்பையும்ஏற்படுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கேரளாவில் தொடுபுழாவில் கிருஷ்ணன்(53) சுசிலா(50) அவரது 22 வயது மகள் அர்ஷா 20 வயது மகன் அர்ஜுன் ஆகியோர்வசித்துவந்த வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவர்களது வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். அப்போது வீடுமற்றும் அதனை சுற்றி தேடி பார்த்தபோது வீட்டின் முன்புறம் தோண்டி பார்த்தனர். அப்படி தேடிப்பார்க்கும்பொழுது கொலை செய்து புதைக்கப்பட்டநால்வரின் சடலங்களும் கிடைத்தது.
கைப்பற்றப்பட்ட அவர்கள் அனைவரது உடல்களிலும் ஊசியால் குத்தப்பட்டு, கீறப்பட்டு, தாக்கப்பட்டு இருந்தது இதனால் இது திட்டமிட்ட கொலை எனவும் போலீசார் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆனால் அங்கு அக்கம்பக்கத்தினர் கூறுகையில், கிருஷ்ணன் ஒரு ஜோதிடர் எனவும் அவரது குடும்பம் பக்கத்தில் இருக்கும் மற்ற குடும்பங்களுடன் சகஜமாக பேசிப்பழக்கமாட்டார்கள் எனவும், அவர்கள் வீட்டிற்கு ஜோதிடம் பார்க்க பல பிரபலங்கள் வந்துள்ளனர் எனவும் மேலும் அவர் பலமுறை பிளாக் மேஜிக் எனப்படும் மாந்திரீக பயிற்சிகளில் ஈடுபட்டார் என லோக்கல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு இருந்து என்றும் இந்தக்கொலையும் மாந்திரீகம் தொடர்புடையதாகத்தான் இருக்கும் எனவும் கூறினர்.