Advertisment

நான்கு நாட்கள் ஆகியும் மீட்க முடியாத நிலை; அச்சத்தில் போராடிய சக தொழிலாளர்கள் மீது தடியடி

4 days of irreparable condition; Caned fellow workers who fought in fear

Advertisment

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க வேண்டும் என சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அங்கு போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisment

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்கியான என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 12/11/2023 அன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 36 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ளனர்.

சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.

உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உணவு செலுத்தப்பட்டு வரும் நிலையில், 200 மீட்டர் பரப்பளவில் உள்ள பாறையை அகற்றும் பணி சவாலாக இருப்பதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மூன்று நாட்கள் ஆகியும் தொழிலாளர்கள் மீட்கப்படாதது சக தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகத்தொழிலாளர்கள் சுரங்கத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

mine uttarkhand
இதையும் படியுங்கள்
Subscribe