Skip to main content

தசரா வழிபாடு... கோடியில் அம்மனுக்கு வழிபாடு...

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
kannika


தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலத்திலுள்ள விஷாகப்பட்டிணத்தில் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு 4கிலோ தங்கம் ஆபரணமும் மற்றும் 4கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்துள்ளனர்.
 

விசாகப்பட்டிணம் குருபாம் பகுதியிலுள்ள 140 ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ளது. இங்கு தசரா பண்டிகையை முன்னிட்டு அம்மன் நேற்று முன்தினம் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையொட்டி அம்மனுக்கு 4 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் 4 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
 

இந்த ரூபாய் வழிபாட்டில் 1 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை நோட்டுகள் இடம்பெற்றிருந்தன. மேலும் வெளிநாட்டு நோட்டுகளும் அம்மனை அலங்கரித்தன. இவை தவிர தங்க பிஸ்கட்டுகள், வைர நகைகளை வைத்தும் அம்மனை அலங்கரித்தனர். அம்மனை வணங்க பொதுமக்கள் இந்த தங்கங்களை கொடுத்துள்ளனர். வழிபாடு முடிவடைந்ததும் உரியவர்களிடமே அதை திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரைப் பறிக்குமா 'கார்பா' நடனம்?; அதிர்ச்சி தரும் தகவல்

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

'Garpa' dance can take life; Shocking information

 

நவராத்திரி விழா என்றாலே அதிகம்  களைகட்டுவது வடமாநிலங்கள் தான். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி விழாக்களில் முக்கியமாக இடம் பெறுவது 'கார்பா' நடனம்.

 

குஜராத்தை பிறப்பிடமாகக் கொண்ட கார்பா நடனம் விடிய விடிய ஆடும் ஒரு வகை நடனமாகும். பாரம்பரிய ஆடைகளுடன் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இசைக்கு ஏற்ப இடைவிடாமல் விடிய விடிய நடனமாடுவர். இந்த நிகழ்ச்சிக்கு குஜராத் மாநிலத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் குஜராத்தில் பரோடா மாவட்டத்தில் 'கார்பா' நடனம் ஆடிய 13 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்த 10 பேரில் 13 வயது சிறுவன் தவிர மற்ற ஒன்பது பேரும் நடுத்தர வயது கொண்டோர் மற்றும் இளைஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது. நவராத்திரி விழா தொடங்கிய முதல் ஆறு நாட்களில் மாரடைப்பு தொடர்பாக 521 அழைப்புகளும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவ சேவைக்காக 108 ஆம்புலன்ஸ் வேண்டும் என 609 அழைப்புகளும் வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு  'கார்பா' நிகழ்ச்சியில் மூன்று பேர் மாரடைப்பால்  உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

 

 

Next Story

அபூர்வ கன்றை கடவுளாக வழிபட துவங்கிய கிராம மக்கள்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

The villagers who started worshiping the rare calf god

 

ஒடிசா மாநிலம், நப்ரங்பூர் மாவட்டம் பிஜப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனிராம். இவருக்குச் சொந்தமான பசு ஒன்று நவராத்திரி தினத்தில் கன்று ஈன்றுள்ளது. நவராத்திரி தினத்தில் தனித்துவமாகக் கன்று பிறந்ததால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த கன்று இரு தலைகள், மூன்று கண்களுடன் பிறந்ததால் தனிராமின் குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனிராம் பசுவை வாங்கினார். பசு, சமீபத்தில் கர்ப்பம் அடைந்தது. பசுவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டது.

 

அவர் பசுவைப் பரிசோதித்த போது, கன்று இரண்டு தலைகள் மற்றும் மூன்று கண்களுடன் இருப்பதை உணர்ந்தார். பின்னர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் வித்தியாசமான அந்த கன்றைப் பசு ஈன்றது. புதியதாகப் பிறந்திருக்கும் இந்த அதிசய கன்றுக்குட்டி இரண்டு தலையோடு இருப்பதால் தாயிடம் பால் குடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நவராத்திரி விழாவில் தனித்துவமாகப் பிறந்திருப்பதால் அப்பகுதி மக்கள் கன்றை ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.

 

The villagers who started worshiping the rare calf god

 

இது தொடர்பாக தனிராம் கூறுகையில், “இரு தலைகளுடன் பிறந்ததால் கன்றுக்குட்டி தன் தாயிடம் இருந்து பால் குடிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, வெளியில் இருந்து பால் வாங்கி கன்றுக்குக் கொடுத்து வருகிறோம் என்றார். நவராத்திரி தினத்தில் இந்த கன்று அபூர்வமாகப் பிறந்ததால், அப்பகுதி மக்கள் இதனைக் கடவுள் துர்கா தேவியின் அவதாரமாக வழிபடத் துவங்கி உள்ளனர்” எனத் தெரிவித்தார். 

 

ad