ADVERTISEMENT

இந்தியாவில் இதுவரை 36.63 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை - ஐசிஎம்ஆர்

12:16 PM Jun 07, 2021 | suthakar@nakkh…


இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. மஹாராஷ்ட்ராவில் 55 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அதேபோன்று தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா எண்ணிக்கை அதிகப்படியாக இருந்துவருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில், இதுவரை இந்தியாவில் 36.63 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று (06.06.2021) மட்டும் 15.87 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT