Advertisment

'34 ஆண்டுகளாக அட்டகாசம்; 44 உயிரிழப்புகள்' - மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய அரசிக் கொம்பன்

 '34 years ; 44 live loss'-Arisikomban who started the game

Advertisment

தமிழக கேரளா எல்லைப் பகுதியான மூணாற்றில் கடந்த 34 ஆண்டுகளாக அட்டகாசம் செய்து வரும் ஒற்றைக் காட்டு யானை அரிசிக் கொம்பன். இந்த காட்டு யானையின் தாக்குதலில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். அரிசிக் கொம்பன் யானையைப் பிடிக்க ஏற்பட்ட பல்வேறு தடைகளுக்குப் பிறகு மீண்டும் அரிசிக் கொம்பனைப்பிடிக்க வேண்டும் என்ற போராட்டம் மூணாற்றில் வலுத்து வருகிறது.

மீண்டும் பல வருடங்களுக்குப் பின்பு அரிசிக் கொம்பன் தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது என அந்தப் பகுதி விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதற்கு முன்பே அரிசிக் கொம்பன் அட்டகாசத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊருக்குள் புகுந்து வீடுகளைத்தாக்குவதோடு ரேஷன் கடைகளை குறிவைத்து தாக்கி அதில் இருக்கும் அரிசிகளை சாப்பிடுவதால் அரிசிக் கொம்பன் என்ற அடைமொழியுடன் இந்த காட்டு யானை அழைக்கப்பட்டுவருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு அரிசிக் கொம்பன் யானையைப் பிடிக்க கேரள உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல அமைப்பு தடை வாங்கிய நிலையில் அதன் அட்டகாசம் தொடர்ந்து அதிர வைத்தது.

Advertisment

சில ஆண்டுகளாக அரிதிலும் அரிதாக மட்டுமே காட்டுப் பகுதியிலிருந்து வெளியே வரும் அரிசிக் கொம்பன் தற்பொழுது அடிக்கடி ஊருக்குள் புகும் செயல் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அண்மையில்வனத்துறை ஊழியர் ஒருவர் அரிசிக் கொம்பனின் தாக்குதலில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து அரிசிக் கொம்பனை படிக்க பல்வேறு வலியுறுத்தல்கள் எழுந்தநிலையில், இதற்காக சின்னக்கல் பகுதிக்கு நான்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. அதேநேரம் யானையைப் பிடிக்கக் கூடாது என மீண்டும் விலங்குகள் நல அமைப்பு கேரளஉயர்நீதிமன்றத்தினை நாடியுள்ளது. இதனால் அதிர்ச்சியில் இருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர்.

highcourt Kerala Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe