கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கு பிரதமரின், பி.எம் கேர் நிதியிலிருந்து 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் வாங்க 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 கோடி ரூபாயும், தடுப்பு மருந்துகள் ஆய்வுக்காக 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.