Advertisment

3000 க்ளிக்ஸ்... கின்னஸ் சாதனை படைத்த ரோஜா!

ROJA

Advertisment

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் எதையாவது செய்து வைரலாவது வழக்கம். அண்மையில் இளைஞர்களுடன் ரோஜா கபடி விளையாடும் காட்சிகளும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கும் விழா ஆட்டோ ஒட்டியும் அசத்தி இருந்தார் .

இந்நிலையில், தற்பொழுது கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார் ரோஜா. அதாவது ஒரே ஆளை 3,000 கேமராக்கள் படம் பிடிப்பதற்காக இந்த கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பெண் அமைச்சர் ஒருவரை 3,000 போட்டோகிராபர்கள் ஒரே நேரத்தில் போட்டோ கிளிக் செய்ததற்கான கின்னஸ் சாதனை இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Andrahpradesh roja
இதையும் படியுங்கள்
Subscribe