கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவின் சிக்கிம் பகுதியில் ஏற்பட்ட பனி பொழிவு காரணமாக உணவு கிடைக்காமல் 300 எருதுகள் உயிரிழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

300 yaks died in sikkim due to excessive snowfall

சிக்கிமின் முகுந்த்நாக் பகுதியில் 250 எருதுகளும்,யும்தாங்கில் 50 எருதுகளின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது என வடக்கு சிக்கிம் மாஜிஸ்ட்ரேட் தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் பனி பொழிவு அதிகமாக இருந்ததால் எருதுகள் ஒரே இடத்தில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டதால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் பனிப்பொழிவு காரணமாக எருதுகள் வேறு இடங்களுக்கும் செல்லமுடியாமல் ஓர் இடத்திலேயேபல நாட்கள் மாட்டிக்கொண்டு பசிக்கு உணவு இல்லாமல் இறந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இன்னும் சில எருதுகள் அப்பகுதியில் சிக்கி தவித்து வருவதாகவும், அவற்றை சுற்றி 5 கிமீ தூரத்துக்கு பனி இன்னமும் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மிச்சமுள்ள இந்த எருதுகளை காப்பாற்ற வன விலங்கு ஆர்வலர்கள் தீவிரமுயற்சி எடுத்து வருகின்றனர்.

Advertisment