பள்ளியில் உணவு சமைத்துக்கொண்டிருந்த பாத்திரத்தில் விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உததரபிரதேசம் மாநிலம் வாராம்பூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றார்கள். இந்த பள்ளியில் மாணவர்களுக்கான உணவை மூன்று பெண்கள் தயாரித்து வருகிறார்கள். இவர்கள் மூவரில் ஒருவர் விடுமுறையிலும், மற்றொருவர் விறகு எடுக்கவும் சென்றுள்ளனர். மற்றொரு பெண் உணவை தயாரித்துக்கொண்டு இருந்த போது, விறகு எடுக்க சென்ற பெண்ணின் குழந்தை சமைக்கும் பாத்திரத்தில் விழுந்துள்ளது.

Advertisment

அப்போது சமையல் செய்துகொண்டிருந்த பெண் காதில் ஹெட்போன்கள் உதவியுடன் பாட்டு கேட்டுக் உள்ளார். இதனால் குழந்தையின் அழுகுரலை அவரால் கேட்க முடியவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகே குழந்தை பாத்திரத்தில் விழுந்ததை அவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். காவலர்கள் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது