7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாஜக அரசுக்கு மிகப்பெரியசறுக்கலைக்கொடுத்துள்ளது. பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால்கூட்டணிக்கட்சிகளான நிதீஷ், சந்திரபாபு தயவில் ஆட்சி அமைக்க வேண்டிய நெருக்கடிக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து,3 வதுமுறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அடுத்த 5ஆண்டுகளுக்குக்கூட்டணிக்கட்சிகளின் பிடியில் தான் ஆட்சி இருக்கப்போகிறது.
இந்த நிலையில், நாட்டின் 18 வது மக்களவை தேர்தலில் மிகக்குறைந்த வயதில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் 3 இளம் பெண்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர். 25 வயதில் அவர்கள் மூவரும்மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசியலில் இளம் தலைமுறையினரை உத்வேகப்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த 25 வயதான சாம்பவி சவுத்ரி என்ற இளம் பெண் பீகார் லோக்சபா தேர்தலில் சமஸ்திபூர் தொகுதியில் போட்டியிட்டார். NDA கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் காங்கிரஸ் வேட்பாளரை ஒரு இலட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவின் இளம் எம்.பி. என்ற அந்தஸ்தை சாம்பவி சவுத்ரி பெற்றுள்ளார். 3 - வது தலைமுறை அரசியல்வாதியான சாம்பவி சவுத்ரியின் தாத்தா மஹாவீர் சவுத்ரி. இவர், காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சரவையில் இருந்தவர். அதன்பின் அவரின் தந்தை அசோக் சவுத்ரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தவர். தற்போதைய நிதிஷ் குமார் ஆட்சியின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார்.
பீகாரில் இளம் வயதில் மக்களவையில் நுழையும்தகுதிபெற்ற சாம்பவி சவுத்ரி டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில்சோசியாலஜிதுறையில் பட்டம் பெற்றவர். இந்தவெற்றிக்குப்பின் சாம்பவி சவுத்ரி பேசுகையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வேன் என்று தெரிவித்துள்ளார். சாம்பவி சவுத்ரிக்கு முன்னாள்ஐபிஎஸ்அதிகாரியானஆச்சரியாகிஷோர்குணாலின்மகன்சயன்குணாலுடன்திருமணம் முடிந்துள்ளது. தேர்தல் பரப்புரைக்கு மோடி பீகார் வந்தபோது சாம்பவிசவுத்ரியைகுறைந்த வயதில் அரசியலுக்கு வந்தவர் என்று வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அதுபோல ராஜஸ்தான் மாநிலத்தில்பாரத்பூர்மக்களவை தொகுதியில் காங்கிரஸ்சார்பாகப்போட்டியிட்டவர்சஞ்சனாஜாதவ். இவருக்கும் 25 வயதே ஆகிறது. இருப்பினும், தன்னைஎதிர்த்துப்போட்டியிட்ட பாஜகவின்ராம்ஸ்வரூப்கோலியை 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். முன்னதாக இவர் 2023 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார். இருப்பினும் வெறும் 409 வாக்குகள் வித்தியாசத்தில் அவர்தோல்வியைத்தழுவினார். இப்போது கிடைத்த வெற்றியின் மூலம் 25 வயதில்ராஜஸ்தானிலிருந்துமக்களவைத்தேர்தலுக்குச்செல்லும் பெருமையைசஞ்சனாஜாதவ்பெற்றுள்ளார்
சாம்பவி சவுத்ரி, சஞ்சனா ஜாதவ் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தின் மச்லிசார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்டவர் பிரியா சரோஜ். 25 வயதான இவர் 35 ஆயிரத்து 850 வாக்குகள் வித்தியாசத்தில் சிட்டிங் எம்.பி. போலாநாத்தை தோற்கடித்தார். இவர் 3 முறை எம்பியாக இருந்த தூஃபானி சரோஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, 18 வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 25 வயதான பிரியா சரோஜ், சாம்பவி சவுத்ரி மற்றும் சஞ்சனா ஆகிய 3 பெண் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.