A 3-year-old girl was found burnt in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் உல்ஹாஸ் நகரில் உள்ள காவல் நிலையத்தில் தனது 3 வயது மகளை காணவில்லை என பெண் ஒருவர் தனது சகோதரருடன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, சிறுமியின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தொடர் விசாரணையில், பெண்ணின் சகோதரர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

Advertisment

அதன் பேரில், பெண்ணின் சகோதரரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போலீசார் நடத்திய அந்த விசாரணையில், கடந்த 18ஆம் தேதி பெண்ணின் சகோதரர் தனது மருமகளான 3 வயது சிறுமியோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விளையாட்டுத்தனமாக அந்த சிறுமியை அறைந்துள்ளார். அந்த அறை பலமாக இருந்ததால், சிறுமி கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து, அந்த நபர் உடனடியாக சிறுமியின் உடலை மறைத்து, சிறுமி காணாமல் போனதாகக் கூறி தனது சகோதரியுடன் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, நேற்று முன் தினம் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வீட்டில் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை பயன்படுத்தி, அந்த நபர், தனது மனைவி மற்றும் ரிக்‌ஷாகாரர் நண்பர் ஆகியோருடன் இணைந்து சிறுமியின் உடலை புதர்களுக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரைபோலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.