Advertisment

3 வயது சிறுமி கற்பழிப்பு! - தங்கையை விட்டுவிடுமாறு கெஞ்சிய 5 வயது அண்ணன்

கொல்கத்தாவில் பேருந்துக்குள் வைத்து 3 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Child

மேற்கு வங்காளம் மாநிலம் மேற்கு கால்வாய் பகுதியில்நேற்று மாலை 5 வயது சிறுவனும், அவனது 3 வயது சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தஷேக் முன்னா (45), சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி, தான் கிளீனராக வேலை செய்யும் பேருந்துக்குள் தூக்கிச் சென்றிருக்கிறார்.

பேருந்துக்குள் சென்ற சிறுமியின்அலறல்சப்தம் கேட்ட சிறுவன், மூடப்பட்டிருந்த பேருந்தின் வாசலுக்கு முன் நின்று தன் தங்கையை விட்டுவிடுமாறு கெஞ்சியிருக்கிறான். ஆனாலும், அந்த நபர் சிறுமியை வெளியே அழைத்துவரவில்லை.

Advertisment

இதையடுத்து, அந்த சிறுவன் தன் அம்மாவிடம் இதுகுறித்து கூறியபின், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவ அறிக்கைக்குப் பிறகுதான் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதா என்பது உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ள காவல்துறை, சம்பவம் இடத்தில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

girl child Molestation Rape
இதையும் படியுங்கள்
Subscribe