
கூகுள் மேப்ஸ் மூலமாக வழியை பின் தொடர்ந்த ஒரு வாகனம் முழுமையடையாத பாலத்தில் இருந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு 3 பேர் கொண்ட குழு கடந்த 24அம் தேதி காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். வாகனத்தின் ஓட்டுநர், கூகுள் மேப் மூலமாக காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் கட்டிமுடிக்கப்படாத பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த அந்த வாகனம், கார் கவிழ்ந்து கீழே விழுந்தது. இதில் காரில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கூகுள் மேப்ஸ் செயலியின் அதிகாரி ஒருவரிடமும், அரசு பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.