Advertisment

காப்பாற்ற முயன்று குளத்தில் மூழ்கிய 3 சகோதரிகள்; சோகத்தில் கிராமம்

 3 sisters who drowned in the pond while trying to save; A sad village

கேரளாவில் மூன்று சகோதரிகள் அடுத்தடுத்து குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது மன்னார்காடு. இதனருகே உள்ள கோட்டோ பாடம் என்ற ஒரு சிறு கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த சகோதரிகள் நஷிதா(26), ரம்ஷீனா(23), ரம்ஷி(18) ஆகியோர் அங்குள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்றனர். அப்பொழுது மூன்று பேரில் ஒருவர் ஆழமான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதைக் கண்ட மற்ற இரு சகோதரிகள் அவரை மீட்பதற்காக முயன்றுள்ளனர். ஆனால் முயற்சி பலனளிக்காமல் மூன்று பேருமே அதே குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். நீண்ட நேரமாக குளத்தின் கரையில் உடைகள் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து மீட்புப் படையினருக்குத்தகவல் கொடுத்தனர். அப்பொழுது 3 சகோதரிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மூன்று சகோதரிகள் ஒரே நேரத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

police sisters pool Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe