3 people were arrested for 15 kg cannabis

Advertisment

புதுச்சேரி, நெட்டப்பாக்கம் காவல்நிலையத்திற்கு உட்பட மடுகரை பகுதியில் போலீசார் வாகன சோதனையில்ஈடுபட்டிருந்தனர். அப்போது அன்பு மற்றும் சந்துரு ஆகிய இருவரும் பொட்டலங்களில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் பிடிபட்ட இருவருக்கும் தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டத்தின் வளவனூர் பகுதியை சார்ந்த பாலாஜி மற்றும் தமிழ் ஆகிய இருவரும் கஞ்சா சப்ளை செய்ததும் தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்திய போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து மொத்தமாக கஞ்சா சப்ளை செய்வது தெரியவந்தது.

3 people were arrested for 15 kg cannabis

இதனையடுத்து நேற்று புவனேஷ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரயிலில் கடத்தி வந்த ரூ 8 லட்சம் மதிப்பிலான 15 கிலோ கஞ்சாவை போதை தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, கஞ்சாவை கடத்தி வந்த விசாகப்பட்டினம் பகுதியை சார்ந்த ஹரியாலா, வாசு மற்றும் அல்லாபாஸ்கர்சுவாமி ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.