
பெட்ரோல் பங்கில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் உள்ளே விழுந்து உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம் ராயசோட்டி நகரில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின்பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பெட்ரோல் பங்கில் எண்ணெய் சேகரிப்பு தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒருவர் கால் இடறி உள்ளே விழுந்துள்ளார்.
அவரை காப்பாற்ற மற்ற இரண்டு பேரும் உள்ளே இறங்க முயன்றனர். ஆனால் இருவரும் தொட்டிக்குள் விழுந்து தவித்து வந்தனர். உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் மூன்று பேரையும் வெளியே மீட்டனர். அதில் இரண்டு பேர் அங்கேயே உயிரிழந்தது தெரியவந்தது. எஞ்சிய ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பெட்ரோல் பங்கின் எண்ணெய் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us