
கிராம வங்கியில் துப்பாக்கி முனையில் வங்கி காசாளரை மிரட்டி மர்ம நபர் ஒருவரால் 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நரசிங்காபள்ளி என்ற கிராமத்தில் ஆந்திர கிராம வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று மாலை சுமார் இரண்டரை மணி அளவில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் கையிலிருந்த துப்பாக்கியை காட்டி வங்கி காசாளரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனகாபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாவலர் இல்லாத கிராமம் வங்கிக்குள் புகுந்த அந்த மர்மநபர் வங்கி காசாளரை மிரட்டி 3 லட்சம் ரூபாய்யை கொள்ளை அடித்துச் சென்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Follow Us